2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்  

அம்பாறை, அக்கரைப்பற்று, கண்ணகி கிராமத்தில்  ஐந்து பேரைக் கொண்ட பெண்கள் குழுவுக்கு ஒருதொகுதி தும்பு மற்றும் இராட்டினங்களும் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன்  'நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' என்ற தொனிப்பொருளில் ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள பெண்களின் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கண்ணகி கிராமத்திலுள்ள தும்புத் தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தும்பு உற்பத்திப் பயிற்சிகளை நிறைவு செய்த 5 பேரைக் கொண்ட பெண்கள் குழுவுக்கே இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X