Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூ.எல். மப்றூக், எம்.ஏ.றமீஸ்
உதுமாலெப்பையின் வெளியியேற்றத்தால், கட்சிக்குள் இருந்த பதறுகளும் சேர்ந்து வெளியேறியுள்ளன எனத் தெரிவித்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் அமைப்பாளர், பிரதித் தலைவர் பதவிகளை வகித்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அந்தக் கட்சியிலிருந்து அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து, அந்தக் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்து வந்த அட்டாளைச்சேனை, பொத்துவில், மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும், உதுமாலெப்பை முன்னிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டாக இராஜினாமா செய்தனர்.
அதனையடுத்து, தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ஆலங்குளத்தில் நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அக்கட்சியின் தலைவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், அட்டாளைச்சேனைப் பிரதேசம் அரசியல் அதிகாரத்தை எவ்வாறு கடந்த காலத்தில் பெற்றதோ, அதேபோன்றதோர் அதிகாரத்தை, அட்டாளைச்சேனை மீண்டும் பெறும் என்றார்.
அதற்குரிய தலைமைத்துவத்தைத் தேடி எடுங்கள் எனக் கூறிய அவர், அட்டாளைச்சேனையில் தலைமை தாங்கக் கூடிய ஒருவரின் கையில் இந்தக் கட்சியை ஒப்படைப்பீர்கள் என நம்புகின்றேன் என்றார்.
மேலும், எமது கட்சியின் ஊடாகப் பதவிகளை பெற்ற பலர், இன்று கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அது அவர்களைப் பொறுத்தது என்றும் நாம் நியாயம் செய்தோமா, உண்மையாக இருந்தோமா என்பதைத்தான் பார்க்க வேண்டுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago