Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடிப் பிரதான வீதியை அண்டியுள்ள உப தபாலகம் அமைக்கப்பட்டு சுமார் 20 வருடங்களாகியபோதிலும், இந்த உப தபாலகம் திறக்கப்படாமலுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சில காலம் இந்த உப தபாலகக் கட்டடத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இயங்கியதுடன், தற்போதும் அக்கட்டடத்தில் கூட்டுறவுச் சங்கப் பெயர்ப்பலகையே காணப்படுகின்றது. இந்த உப தபாலகம் இயங்கத் தொடங்கினால், சுமார் 1,800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மை அடையமுடியும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உப தபாலகத்தை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த உப தபாலகம் செயற்படாமை தொடர்பில் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கேட்டபோது, 'இந்த உப தபாலகப் பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். அப்பகுதி கிராம அலுவலர் ஊடாகவும் அறியக் கிடைத்துள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உப தபாலகத்தை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்' என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago