2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உயர்தர வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை சாஹிராக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, நாளை மறுதினம்  புதன்கிழமை  காலை 08.30 மணி தொடக்கம் கல்லூரியின் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் சிரேஷ்ட ஆலோசகர், பொறியியலாளர் யூ.எம்.பாறுக் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X