Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
வவுணதீவு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் நேற்று (29) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்தார்.
சுற்றுநிருபங்கள் மூலமும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலமும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட, கடமைப் பொறுப்புக்களை, வேறு சேவையை சேர்ந்தர்களுக்கு தவிசாளர் வழங்கியுள்ளதாகவும் அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சுற்றுநிருபங்களையும், வர்த்தமானி அறிவித்தல்களையும் உதாசீனம் செய்துள்ளதாகவும், இவ்வாறு செய்கின்றமையானது, அரசின் உத்தியோகபூர்வ கட்டளைகளுக்கு முரணாக செயற்பட்டு, அரச சேவையை அவமதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இவ்வாறான பல முறைப்படுகளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாங்கள் செய்து, தீர்வைப் பெற்றுள்ளோம் என்றும் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர், ஏ.ஜீ.முபாறக், செயலாளர் நாயகம் வ.பற்குணன், அதியுயர்பீட உறுப்பினர் எம்.எம்.எம்.பைஸ் ஆகியோர் சென்று குறித்த முறைப்பாட்டைக் கையளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago