2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உலமாக் கட்சியின் வரைவை சமர்ப்பிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்கான உலமாக் கட்சியின் ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அடங்கிய வரைவை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் செயற்படும் அரசியல் யாப்புச் சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

சில முஸ்லிம் கட்சிகள், அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்குரிய வரைவை தயாரிக்க முடியாமல் இன்னமும் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. செயலமர்வுகள் நடத்தி ஆலோசனைகளை பெறுவதாகக் கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், உலமாக் கட்சி தனது வரைவை துரிதமாக தயாரித்து முடித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி கல்முனையில் நடைபெறவுள்ள உலமாக் கட்சியின் ஊடக மாநாட்டில் தாம் தயாரித்துள்ள வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆலோசனைகள், முன்மொழிவுகள் மற்றும் தீர்வுத்திட்டம் பற்றி விவரித்துக் கூறவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X