Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மே 03 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே. றஹ்மத்துல்லா, எஸ்.எல். அப்துல் அஸீஸ்
உலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தானம் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 09 மணிக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யவுள்ளனர்.
ஊடகப் பணியோடு கல்வி, கலாசார மற்றும் சமூகப்பணிகள் என பல்வேறுபட்ட சேவைகளை முன்னெடுத்து வரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் குருதிக் கொடையாளர்கள் தொடர்பினை மேற்கொண்டு தமது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago