2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜி.ஏ.கபூர், எஸ்.ஜமால்டீன்,ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் ஸ்மையில்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில்; அமைக்கப்பட்டு வரும் தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை அகற்றுமாறு கோரி, அப்பகுதியில்  வாழும்; குடும்பங்கள் நேற்று (19) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் பல்வேறு நோய் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை அமைப்பதற்கு முன்னர், சுத்திகரிக்கப்படாது டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடமாகக் கிடக்கும் குடியிருப்புக் காணியை சுத்திகரிக்க மகஜர் அனுப்புவதாக  கூறியே வெள்ளைப் கடதாசியில் பிரதேச மக்களிடம் ஒப்பங்கள் பெறப்பட்டு, அதனை தொலைத் தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தினை அமைப்பதற்கான விருப்பமாகக் கூறி இது அமைக்கப்படுவதாகவும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க  வில்லை என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து  அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X