2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஐ.தே.க அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, சாகாமம் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், இனந்தெரியாதவர்களால் நேற்று திங்கட்கிழமை (01) இரவு திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

அலுவலகக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுவலகத்தில் இருந்த நிரப்பப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்துவப்படிவங்கள், பொதுமக்கள் தமது தேவைகள் குறித்து அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கிய கோகிக்கைக் கடிதங்கள் மற்றும் கணினியின் ஆட்டிஸ்க் என்பனவே திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X