Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
நாட்டில் ஏற்பட்ட பேர்ச் சூழல் காரணமாக எங்களுடைய உறவுகள் திட்டமிட்டு கடத்தப்பட்டு காணாமல்போய் கொலை செய்யப்பட் சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றபோதும், உரியவர்களை சட்டத்தின்முன் இதுவரை நிறுத்தவில்லை. எனவே, இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஊடாக மீண்டும் ஒருமுறை ஐ.நா. சபைக்கு வலியுறுத்த நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட காணாமல்போன உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் 2ஆம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க கட்டட முன்றலில் இடம்பெற்ற காணாமல்போனவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையில் 68 வது சுதந்திர தினம் நாடுபூராகவும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களில் காணாமல்போன கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எங்களுடைய தமிழ் உறவுகளின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சுதந்திரதினத்தில் எங்களுக்கு சுதந்திரமில்லை என்ற ஆதங்களுடன் எங்கள் உறவுகள் கண்ணீர் சிந்துகின்றதுடன் இன்றைவரைக்கும் அதற்கான தீர்வு மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் அரசாங்கத்துக்கும் ஐ.நாடுகள் சபைக்கும் வெளிகாட்டியுள்ளனர்
ஐ.நா சபையில் இந்த அரசாங்கம் பலமுன்மொழிவுகளை கொடுத்திருக்கின்றது. ஆனால், எம்முடைய வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் அவ்வாறு ஏதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதேவேளை, இன்று கடத்தியவர்கள் கொலை செய்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்றை வரைக்கும் விசாரிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாத பாரிய குறை இலங்கையில் இருக்கின்றதுடன் பல இடங்கள் அழிவுற்ற நிலையால் அந்த இடங்களில் மக்கள் சென்று குடியேறமுடியாத துன்பகரமான நிலையை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இந்த எழுச்சியினூடாக ஒரு நீதி நியாயத்தை ஒட்டிய தீர்வை காணாமல்போன உறவுகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago