2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஒரு சந்தையை இரு குழுவினர் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணசபையின் 4 கோடி ரூபாய் நிதியில் அம்பாறை, இங்குரானைப் பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட சந்தைத்தொகுதியை ஒரே தினத்தில் இரு குழுவினர் திறந்து வைத்த சம்பவம், சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

இத்திறப்பு விழா நடைபெறவிருந்த குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் அங்கு வந்த ஆரம்பக்  கைத்தொழில் தயாகமகே மற்றும் அவரது பாரியாரும்; பிரதி அமைச்சர் திருமதி அனோமா கமகே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் இச்சந்தையை முதலில் திறந்துவைத்தனர்.

கட்டடப் பெயர்ப்பலகையின் திரைச்சீலையை இக்குழுவினர் திரைநீக்கம் செய்துவைத்துள்ளனர்;. பின்னர் அச்சீலையையும் இவர்கள் கையோடு கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, சுமார் 10 நிமிடங்களின் பின்னர் அங்கு வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையிலான குழுவினர் நினைவுப்படிகத்துக்கு  மற்றுமொரு சீலையை வைத்து திரைநீக்கம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X