Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
'ஒரு பிரதேச செயலகத்துக்கு ஓர் உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவதை அரசியல் சாசனத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் சமர்ப்பித்துள்ள அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கான ஆலோசனையில் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைப் பெறும் குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான அமர்வு நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அம் மன்றம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'எமது நாட்டின் அரசியல் யாப்பு மறுசீரமைப்பின் பிரகாரம் புதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு எனும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்போது நாட்டில் அமைந்துள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சமாந்தரமாக ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும் என்பதை அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டும் என எமது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் பரிந்துரை செய்கிறது.
அதிகாரப்பகிர்வு விடயத்தில் மிகவும் அடிமட்ட விடயத்தில் பாரிய குறைபாடு காணப்படுகிறது. குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கின்ற விடயத்தில் பிரதேசத்துக்கு பிரதேசம் முரண்பட்ட கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு சில பிரதேசங்களுக்கு அநீதியிழைக்கப்படுகிறது. இந்த பாரிய முரண்பாட்டுக்கு தீர்வாகவே ஒரு பிரதேச செயலகத்துக்கு ஓர் உள்ளூராட்சி மன்றம் என்கின்ற கொள்கை அரசியல் சாசன ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை சமர்ப்பிக்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றம் எனும் அரசியல் அதிகார கட்டமைப்பானது ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் நிறுவப்படுவதன் மூலம் அந்த முரண்பாடு முற்றாக களையப்படும் என எதிர்பார்க்கின்றோம். இதன் பிறகு ஒரு பிரதேச செயலகம் உருவாக்கப்படுகின்றபோது அல்லது அவ்வாறான செயலகம் ஒன்று இயங்கி வருகின்றபோது இயல்பாகவே அதற்கென ஓர் உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட்டு, மக்களிடம் அதன் அதிகாரம் கையளிக்கப்படும்.
இன்று மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான அதிகாரம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் கிராமங்கள் அதிகாரம் பெறுகின்றபோதுதான் அந்தந்த கிராம மக்களின் பிரச்சினைகள் நேரடியாக, இலகுவாக தீர்க்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தகைய ஒரு சிறப்பான வழிமுறைதான் உள்ளூராட்சி மன்ற நடைமுறையாகும். அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் இன்னும் அதிகரிக்கப்படும்போது முழு நாட்டு மக்களும் நன்மை பெறுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.
அந்த வகையில் நிர்வாகத்தை பிரதேசம் தோறும் பரவலாக்குவதற்காக உருவாக்கப்பட்டுஇ வெற்றிகரமாக செயற்படுகின்ற பிரதேச செயலகங்களுக்கு சமாந்தரமாக உள்ளூராட்சி மன்றம் எனும் அதிகார அலகு செயற்பட்டு வருகின்றது. எனினும் நாட்டிலுள்ள பெரும்பாலான பிரதேச செயலக பிரிவுகளுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கி வருகின்ற போதிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கு மாத்திரம் நாட்டின் தேசிய அரசியல் தலைமைகளினால் உறுதியளிக்கப்பட்டும் கூட அத்தகைய உள்ளூராட்சி மன்றம் ஒன்று இன்னும் ஸ்தாபிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் யாப்பில் ஒரு பிரதேச செயலகத்துக்கு ஓர் உள்ளூராட்சி மன்றம் எனும் கொள்கை உள்ளடக்கப்படுமாயின் மக்கள் அரசியல் தலைமைகளை நம்பி ஏமாற வேண்டியிருக்காது. அந்த அதிகாரம் மக்களுக்கு இயல்பாகாவே கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆகையினால் எமது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் முன்வைக்கின்ற இந்த முன்மொழிவை தேசிய முக்கியத்துவம் மிக்கதொன்றாக கருதி உள்வாங்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago