2025 மே 22, வியாழக்கிழமை

ஒருவகைக் காயை உட்கொண்ட 7 சிறுவர்கள் சுகவீனம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் ஒரு வகையான காயை உட்கொண்ட 04 வயது முதல் 07 வயதுச் சிறுவர்கள் சுகவீனமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவர்கள் ஒரு வகையான காயை உட்கொண்டபோது, விஷமான நிலையில் உடனடியாக ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இச்சிறுவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.முஹம்மட் அலி தெரிவித்தார்.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள்  உள்ளடங்கலாக 07 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X