2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ஒலுவில் கடலரிப்பு: தகவல் திரட்டவும்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் கடல் அரிப்பினால் ஏற்பட்ட சேத விவரங்கள்  தொடர்பில் சரியான தகவல் திரட்டி,  எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கையளிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார,  அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பணித்துள்ளார்.

எதிர்வரும் 09ஆம் 10ஆம் திகதிகளில் இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர்மட்டக்குழுவினர் ஒலுவில் பிரதேசத்துக்கு வருகைதந்து ஒலுவில் கடலரிப்புத் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். இதன் பின்னர் அக்குழுவினர் கள விஜயம் மேற்கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

நேற்று (03) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடலின்போது, அவர் இதனைக் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X