2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஓவியர் ஜமால்தீனுக்கு கலாபூஷணம் விருது

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்,எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன், 2015ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதைப் பெற்றுள்ளார்.

மஹரகம இளைஞர் சேவை மன்றக் காரியாலய மண்டபத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கலாபூஷணம் அரச விருது விழா நிகழ்வில் வைத்து, இவருக்கான விருது வழங்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடம் தோறும் நடத்தப்படும், கலாபூஷணம் விருது வழங்கல் விழாவின், 31 ஆவது நிகழ்வு, இன்று செவ்வாய்கிழமை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெணான்டோ தலைமையில் நடைபெற்றது.

அந்த வகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மேற்படி ஏ.எல். ஜமால்தீன் ஓவியம், பாடல் இயற்றிப் பாடுதல் உள்ளிட்ட துறைகளில் நீண்ட காலமாக தடம்பதித்து வருகின்றமையை கௌரவிக்கும் வகையில், கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X