2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2021 ஜூன் 11 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

சம்மாந்துறை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பிரதேசத்தில்  சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது, கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வளத்தாப்பிட்டி பிரதேசத்திலுள்ள வயலுக்குச் செல்லும் ஒரங்கா நீர் ஓடைக்கருகாமையில், தந்தையும், மகனும் மற்றும் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர்  நேற்று (10) அதிகாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கான பெரல் வெடித்து சிதறியதால், தீ பரவி சம்பவ இடத்தில் 56 வயதுடைய தந்தை இறந்தததையடுத்து, தந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்த உறவினரான 26 வயதுடையவர், வீட்டில் தாயாருடன் தகராறு காரணமாக தீயிட்டதாக தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .