Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, கல்முனைப் பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளிப் பிரதேசத்துக்கு கஞ்சா கலந்த மாவா பாக்கு மற்றும் மதன லேகியத்தை வைத்திருந்ததாகக் கூறப்படும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், இச்சந்தேக நபரி;டமிருந்து தங்கச்சங்கிலி ஒன்றையும்; மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கல்முனை -சவளக்கடை பிரதான வீதியில் பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும் இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இச்சந்தேக நபரை வழிமறித்துச் சோதனையிட்ட வேளையில் அவரிடம் கஞ்சா கலந்த மாவா பாக்கு 21 கிராமும் ஆறு மதனலேகியங்களும் ஒரு தங்கச்சங்கிலியும்; இருந்தமை தெரியவந்தது.
இச்சந்தேக நபர் சவளக்கடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்காகவே கஞ்சா கலந்த பாக்குகளை கொண்டுவந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago