2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சாவுடன் நபர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன் 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 650 கிராம் கஞ்சாவுடன் 45 வயதுடைய நபரொருவரை, இன்று திங்கட்கிழமை (14) காலை 10 மணிக்கு  அம்பாறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, அக்கரைப்பற்று இலங்கை போக்குவரத்து சாலைக்கு அருகாமையில் குறித்த நபர் கஞ்சாவை எடுத்து வந்தபோது விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. 

சந்தேகநபரை, அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X