2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் 16 வயதுச் சிறுவன் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து அம்பாறை 3ஆம் கட்டைப் பகுதிக்கு கஞ்சாவைக் கொண்டுசென்றதாகக் கூறப்படும் 16 வயதுடைய சிறுவனை அரசடி மேம்பாலத்துக்கு அருகில் சனி;க்கிழமை (03) நள்ளிரவு கைதுசெய்த பொலிஸார், இச்சிறுவனிடமிருந்து 10 கஞ்சா பக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அரசடி மேம்பாலத்துக்கு அருகில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இச்சிறுவனை வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது, குறித்த சிறுவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதுடன், இச்சிறுவனிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X