2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கடல் துப்புரவு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனைப் பிரதேச  கடற்றொழிலார்களின் நலன் கருதி  கரையோர கடல் துப்புரவு வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை  கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும்  இவ்வேலைத்திட்டத்துக்கு முதல் கட்டமாக 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்முனை கரையோரப் பிரதேசங்களில் திண்மக்கழிவுப்பொருட்கள் அதிகம் காணப்படுவதனால் அப்பிரதேச மீன்பிடித் தொழிலாளர்கள் சிரமத்துக்கு முகங்கொடுக்கும் விடயம் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதனை அடுத்து இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X