2025 ஜூலை 09, புதன்கிழமை

கட்டங்கட்டமாக உரமானியம் வழங்கப்படும்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

சவளக்கடை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட நாவிதன்வெளிப் பிரதேச விவசாயிகளுக்கு கூடிய விரைவில்; கட்டங்கட்டமாக உரமானியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சவளக்கடை கமநல சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வடிவேல் விநோதன் தெரிவித்தார்.

உரமானியத்துக்காக விவசாய அமைப்புகளினூடாக சவளக்கடை கமநல சேவைகள் திணைக்களத்துக்கு பணம் செலுத்தி பல தினங்கள் கடந்துள்ளபோதிலும்,  இதுவரையில் உரமானியம் வழங்கப்படவில்லையென நாவிதன்வெளிப் பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் சவளக்கடை கமநல சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடம் கேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

சவளக்கடை கமநல சேவைகள் திணைக்களத்தின் நிர்வாக எல்லைக்குள் சுமார் 11,000 ஏக்கரில் பெரும்போகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில்,  சவளக்கடை விவசாய வயல் கண்டத்தில் 6,000 ஏக்கரில் பெரும்போகச் செய்கைக்கான உரமானியம் பெறுவதற்கு விவசாயிகள் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், 2,000 ஏக்கருக்கான  உரமானியமே கிடைத்துள்ளது. மேலும், 4,000 ஏக்கருக்கான உரமானியம் கிடைக்கவேண்டியுள்ளது.

கிடைத்துள்ள மிகக் குறைந்தளவான உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதில் பிரச்சினை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள கமநல சேவைகள் தலைமைக் காரியாலயத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூடிய விரைவில் உரமானியம் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்று தலைமைக் காரியாலய உத்தியோகஸ்தர்கள் தெரிவித்ததாகவும்; அவர் கூறினார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .