2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கட்டட வசதியை ஏற்படுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் கட்டட வசதியை ஏற்படுத்தித் தருமாறு பெற்றோர் இன்று புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் சம்புநகர் ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 35 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.
சகல வசதிகளுடன் கூடிய வகுப்பறைக் கட்டடம், மலசலகூட வசதி என்பவற்றை ஏற்படுத்தித் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அரசாங்கத்தினால் விசேட தேவையுள்ளவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற 03 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கூட சில மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸிடம் வினவியபோது, எதிர்வரும் 2016ஆம் ஆண்டில் விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான தனியான வகுப்பறை கட்டடம் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X