2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கதிர்காம யாத்திரிகர் குழுவினரை யானை தாக்கியதில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,  நடராஜன் ஹரன்

கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு குமண காட்டுப்பாதை ஊடாக பாதயாத்திரை சென்ற அடியார் குழுவினர் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் தாக்கியதில் 02 பெண்கள் உட்பட 05 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 03 பேர் பாணமை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர்; மேலதிக சிகிச்சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வண்ணாத்தி கிணற்றடி என்ற இடத்தில் உறங்கிக்கொண்டிருந்த இவர்களை திடீரென  அங்கு வந்த காட்டு யானைகள் தாக்கியுள்ளன. இதன்போது, யாத்திரிகர் குழுவினர் கத்தி கூச்சலிட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு விரைந்த இராணுவத்தினர் யானைகளை விரட்டியதுடன், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கவும் உதவியளித்தனர்.  

மட்டக்களப்பு, பழுகாமம் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X