2025 மே 05, திங்கட்கிழமை

கம்பெரலிய வேலைத்திட்டம்: விசேட கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத்

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டம் பற்றிய விசேட கலந்துரையாடல், அக்கரைப்பற்றில் நேற்று (26) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டார்.

அரசாங்கத்தின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மூலம் அக்கரைப்பற்று மாநாகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியனவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை அக்கரைப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 கிலோமீற்றர் காபட்ட வீதி அமைப்பது தொடர்பிலும், எதிர்வரும் மார்ச் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நெல்சிப் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபைக்காக மேற்கொள்ளப்படவுள்ள 10 கோடி ரூபாவுக்கான வேலைத் திட்டமும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள ஐந்து கோடி ரூபா ஒதுக்கீட்டிற்றாக வேலைத்திட்டம் போன்றன எவ்வாறு மேற்கொள்வது எனவும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X