Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் கல்வி கருத்தரங்கு சர்வதேச சிங்கப்பூர் டச் சமூகசேவைகள் நிறுவனத்தினால் நடத்தப்பட்டது.
இச் செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வான சர்வதேச சிங்கப்பூர் டச் சமூகசேவைகள் நிறுவனத்தினரின் கலைநிகழ்ச்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் திருக்கோவில் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.தர்மபாலன் தலைமையில் குடிநிலம் மக்கள் தேவசபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (09) மாலை இடம்பெற்றது.
இதன்போது, சிங்கப்பூர் டச் சமூக சேவைகள் நிறுவனத்தின் வளவாளர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டதுடன் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.தர்மபாலன் மற்றும் சிங்கப்பூர் டச் சமூகசேவைகள் நிறுவனத்தின் அதிகாரி சோன்லீம் ஆகியோர் கல்வி கருத்தரங்கில் பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இச்செயலமர்வில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகள்,மகிழ்ச்சிகரமான வகுப்பறை சூழல்,சர்வதேச தரத்திலான கற்பித்தல் நுட்ப முறைகள்,மாணவர்களின் வருகையை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .