2025 மே 22, வியாழக்கிழமை

கருத்துச் சுதந்திரம்: கடிவாளம் பூட்டப்பட்ட குதிரையாக அமைய வேண்டும்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

குற்றவியல் நடவடிக்கைக் கோவை மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் 291 ஆம் தீர்வுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து இனங்களுக்கிடையில் வெறுப்புக்களையும் கருத்துக்களையும் ஊட்டக் கூடிய, பரப்பக் கூடிய நபர்களை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அது ஒரு சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையாக இருக்கின்றனர் என முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

பாலமுனை முபீதின் உடைந்த கால்கள் குறுங்காவிய நூல்வெளியீட்டு விழா, பாலமுனை அல்-ஹிதாய வித்தியாலய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை நடைபெற்றது. 

இதில் விசேட அதிதிகளில் ஒருவராக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கருத்துச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமா? அல்லது எந்தக் கருத்தினையும் வெளியிடக் கூடிய சுதந்திரம் வேண்டுமா? என்பது பற்றிய மாபெரும் கருத்துப்பரிமாறல்கள் இன்றய காலகட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரங்கள் சமயம் மற்றும் மார்க்க விடயங்களைத் தூண்டி, இனங்களுக்கிடையிலான துவேஷங்களையும், வேறுபாடுகளையும் ஏற்படுத்தி மனங்களை புண்படுத்தும் வகையிலானதாக அண்மைக்கால செயற்பாடுகள் இருந்து வருவதனைக் காண்கின்றோம்.

கருத்துச் சுதந்திரம் என்பது கடிவாளம் பூட்டப்பட்ட ஒரு குதிரையாக அமைய வேண்டும். கடிவாளம் அற்ற ஒரு குதிரையைப் போன்று கருத்துச் சுதந்திரம் இருக்க முடியாது என்று கூறப்படுகின்றது.
 
ஒருவருக்கு வழங்கப்படுகின்ற உரிமை மற்றவருடய சுதந்திரத்தில் பாதிக்கக் கூடாது. மக்களிடையே இருக்கின்ற சகஜ வாழ்க்கை அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு கருத்துச் சுதந்திரத்தினால் பாதிப்படையக் கூடாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X