Freelancer / 2021 ஜூலை 18 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
கல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுமென்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.
பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான உயர் மட்ட சுகாதார அதிகாரிகள் குழுவினர் கல்முனைக்கு இன்று (18) விஜயம் செய்த போதே மேற்கண்ட விடயம் அறிவிக்கப்பட்டது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையில் நீண்டநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் எல்.பானப்பிட்டிய, டொக்டர் சுதத் தர்மரத்ன உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்தனர். கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.
பிராந்திய சுகாதார நிலைமை கொவிட் 19 பரம்பல் தடுப்பு முறைகள் பற்றி விலாவாரியாக கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் குழுவினர், கல்முனை ஆதார வைத்தியசாலை, கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைகளுக்கும் விஜய செய்தனர். குழுவினர் கல்முனைப் பிராந்திய கொவிட் குழுவினரைப் பாராட்டி விடைபெற்றனர்.

6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025