2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பாவனையை முற்றாக ஒழிக்கும் பொருட்டு, கல்முனையில் மாபெரும் விழிப்புணர்வு மாநாடு ஒன்றை நடத்துவதற்கு, 25 நிறுவனங்கள் ஒன்றிணைந்த செயலணி ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாடு, எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 08 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில், கல்முனை முகைதீன் ஜூம் ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு தொடர்பாக, ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட செய்தியாளர் சந்திப்பு, நேற்று முன்தினம் (01) மாலை செயலணியின் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் செயலணியின் செயலாளர் டொக்டர் எம்.எச்.றிஸ்வின், பிரதிச் செயலாளர்களான கலாநிதி எஸ்.எல்.அஸீஸ், என்.எம்.நௌஷாட் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

அன்றைய தினம், மேற்படி நேரப்பகுதியில், கல்முனையில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி, வர்த்தக்கர்களையும் பொதுமக்களையும் இம்மாநாட்டில் முழுமையாக பங்குபற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று, மேற்படிச் செயலணியின் பிரதானிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X