2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான்

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள், பொலிஸாருக்குத் தகவலை தெரியப்படுத்தினர்.

இதனை அடுத்து, அப்பகுதிக்குச்  சென்ற பொலிஸார், பொதுமக்கள் ஒன்றிணைந்து, கரை ஒதுங்கிக் கிடந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டு, மீட்டுள்ளனர்.

கல்முனையில் - 02 கிராமசேவையாளர் பிரிவில் வசித்து வந்த 78 வயதுடைய சின்னத்தம்பி நேசம்மா என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சடலம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .