2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கலை இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருதுப் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரதேச கலை இலக்கிய விழா, பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சாய்ந்தமருதுப் பிரதேச கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவர், கவிஞர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் 'நிர்வாக நேர்மைக்கு கலைகளின் மரியாதை' எனும் தொனிப்பொருளில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவின்போது 'மருதம் கவிதைகள்' நூல் வெளியீடும் பரிசளிப்பும் நடைபெறவுள்ளன.  

சட்டம், ஒழுங்கு அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் சேவையைப்  பாராட்டி அவர் கௌரவிக்கப்படவுள்ளார்.

சிறப்புரையை கவிஞர் நவாஸ் சௌபி ஆற்றவுள்ளதுடன், கவிஞர் தீரன் ஆர்.எம்.நௌசாத் கவி வாழ்த்துப் பாடவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X