2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கல்முனை மாநகர சபையில் நாளை பட்ஜெட்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் மாநகரசபையில் நாளை வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ள மாதாந்த சபை அமர்வின்போதே, முதல்வரினால் இந்த வரவு -செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரான மறைந்த எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவுக்கான அனுதாபப் பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது.  

அத்துடன், சில வீதிகளுக்கு பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பிரேரணைகளும் இந்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X