2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கல்முனையில் செயலமர்வு

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

விவசாய அபிவிருத்தித் திணைக்களம் ருஹூனு நிறுவனத்துடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களுக்கு விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக நடத்திய செயலமர்வு கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (02) நடைபெற்றது.

இதன்போது,மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்துக்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயல்முறைமையிலான அட்டவணை வகுக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் உதவிப் பொருளியலாளர் குமுது ரெட்நாயக்க, விவசாய போதனசிரியர்களான ஆர்.ராதிக்கா மற்றும் ரீ.செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .