Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினரால், கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (02), கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வும் கலாச்சார கலைநிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருக்கோவில், மக்கள் வங்கிக் கிளையின் அனுசரணையோடு, ஆலய தலைவர் சு.சுரேஸ் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவின் பிரதம அதிதியாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்துகொண்டார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன், மக்கள் வங்கி பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.சம்சுடீன், திருக்கோவில் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் அப்துல் கபூர் நிசாம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கல்வியின் சாதனையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதேவேளை சிறந்த சேவையாற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
21 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago