Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Kogilavani / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
காலாவதியான குளிர்பானத்தை திகதி மாற்றம் செய்து விற்பனை செய்த வர்த்தகருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி கந்தசாமி நேற்று(3) உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த மாதம் 11 ஆம் திகதி, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, காலாவதியான குளிர்பானத்தை விற்பனை செய்தமைக்காக மேற்படி வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 11 வர்த்தக நிலயங்களில் காலாவதியான, நுகர்வுக்கு பொருத்தமில்லாத மற்றும் விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாத குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய், 6 ஆயிரம் ரூபாய், 7 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
28 minute ago