2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கழிவுநீரை வடிகானுக்குள் விடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வீட்டுக்கழிவு நீரை முறையாக அகற்றாமல் வடிகான்களில் ஓட விடுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்  ஏ.எல்.அலாவுதீன், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

சிலர், சமையல் அறை மற்றும் குளியல் அறையிலிருந்து வெளியாகும் கழிவு நீரை வீட்டுக்கு அருகிலுள்ள வடிகான்களில் ஓட விடுகின்றனர். இதனால், இலையான்கள் மொய்ப்பதுடன், துர்நாற்றமும் வீசி நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வாழ்கின்ற  மக்கள் சிலர் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் குறித்த இடங்களை அடையாளப்படுத்தியுள்ளதுடன், கழிவு நீரை முறையாக அகற்றாமல் வடிகான்களுக்குள் ஓட விடுபவர்களுக்கு எச்சரித்துள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் கழிவு நீரை சொந்த இடத்தில் முறையாக அகற்ற வேண்டும். இதனை உதாசீனம் செய்து கழிவு நீரை வடிகான்களுக்குள் ஓட விடுபவர்கள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X