2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கஹட்டோவிட்ட மகளிர் கல்லூரி மாடிக்கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் நீண்ட நாள் குறையாக விளங்கும் மாடிக் கட்டடமொன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது. 

மூன்று மாடிகளாக அமையவுள்ள இக்கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை சனிக்கிழமை (19) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குவைத் நாட்டின் தூதுவர் யாகூப் யூசுப் அல் அகீகியும் கௌரவ அதிதிகளாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவஸம், அர்ஜுன ரணதுங்க, கபீர் ஹாசிம் உட்பட மாகாண, பிரதேச சபை உறுப்பினர்களும் புத்திஜீவிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X