2025 மே 05, திங்கட்கிழமை

குடிசைகள் தீக்கிரை

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத்

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை அண்டி பகுதியில் உள்ள இரு குடிசைகள் நேற்று (25) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியில் கடந்த எட்டு வருடங்களாக வசித்து வரும் குடியிருப்பாளர்களின் குடிசைகளே இவ்வாறு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு வேளையில் வருகை தந்த கும்பலொன்றே குடிசைகளுக்கு தீயிட்டிருக்கலாம் என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீயிடப்பட்ட சந்தர்ப்பத்தில் இக்குடிசைகளுக்குள் எவரும் இல்லை எனவும், அச்சந்தர்ப்பத்தில் இக்குடிசைகளில் வசித்து வந்தவர்கள் உறவினர்களில் இல்லங்களுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயிட்டுக் கொழுத்தப்பட்ட இக்குடிசைகளுக்குள் இருந்த உடைமைகள் தீயில் அழிந்துள்ளதாகவும் இதனால் பெருந்தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குடிசை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X