Princiya Dixci / 2021 ஜூலை 18 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலளார் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 தடுப்பூசி, இலங்கையின் சகல சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு மாத்திரம் வழங்கப்படாமையானது அநீதியாகும்.
“இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தொடர்பாக கவனயீனமாக இருப்பதாகத் தெரிகின்றது. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதோடு, மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
“கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டு வரும் நிலையில், கல்முனைக்கு ஏன் இந்தத் தாமதம்?
“உங்களின் கருணையான அவதானத்தைச் செலுத்தி, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு கொவிட் - 19 தடுப்பூசிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவும்” என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 minute ago
13 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
16 minute ago
21 minute ago