Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 25 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
காணாமல் போனவர்களுக்காக நீதி கோரி அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபடவுள்ளனர்.
அக்கரைப்பற்று மணிக்கோட்டு கோபுரத்தடியிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகும் பேரணி, அக்கரைப்பற்று நகரமண்டபம்வரை சென்று அங்கு பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது
'நன்றாகவே போதும் இனியும் வேண்டாம்', 'ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்' எனும் தொனிப்பொருளில்; இந்தக் கவனயீர்ப்பு பேரணி இடம்பெறவுள்ளது. இப்பேரணியில் மக்களை அணிதிரளுமாறு காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 'எமது மக்கள் இருக்கின்றனரா? இருப்பார்களென்றால் எங்கே? கொல்லப்பட்டார்களேயானால் ஏன் கொன்றார்கள்? யார் கொலை செய்தது? எதற்கா? எங்கே புதைத்தீர்கள்?
மைத்திரி அரசாங்கம் ஜெனீவாவில் இது தொடர்பாக சில வாக்குறுதிகளை கொடுத்தது அதில் நடந்த உண்மைகளை வெளிப்படுத்துங்கள், நீதியை நிறைவேற்றுங்கள், நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொடுங்கள், மீண்டும் காணாமல் போகச் செய்யும் சம்பவங்களை தடுத்து விடுதல் போன்ற வாக்குறுதிகளை இதுவரை எந்த அரசாங்கமும் வழங்கியதில்லை
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க அவர்களுக்கு ஞாபகப்படுத்த மற்றும் இதனை வலியுறுத்துவதற்காக நாங்கள் முயற்சிக்கின்றோம். நாங்கள் துயரப்பட்டது நன்றாகவே போதும். நாம் பட்ட துன்பங்கள்; எதிர்காலத்தில் எந்த ஒரு தாயோ, தகப்பனோ, மனைவியோ, பிள்ளைகளோ அனுபவிக்கக்கூடாது. எனவே, இதற்கான நீதி கேட்டு மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்களான மங்கள சமரவீர, அமைச்சர் மனோகணேசன், பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து காணாமல் போனேரின் உறவினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago