Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 20 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கதிர்காம ஆடிவேல் விழாவையிட்டு குமணக் காட்டு வழியாகச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
இக்காட்டுப்பாதை ஜூலை மாதம் 15ஆம் திகதி மூடப்படும் எனவும் அவர் கூறினார்.
எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள கதிர்காம ஆடிவேல் விழா, 21ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளது.
இம்முறை குமணக் காட்டுப்பகுதியில்; பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்கள் விநியோகம் மற்றும் அன்னதானமும் தடைசெய்யப்பட்டுள்ளன. காட்டுப்பகுதியில் பாதயாத்திரிகர்களுக்கான குடிநீர் விநியோகத்தை நீர்வழங்கல் அதிகார சபை, லகுகலை, பாணமை, திருக்கோவில் பிரதேச சபைகள், மாவட்டச் செயலகமும் மேற்கொள்ளும். சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .