2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 110 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2016 மே 11 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு    

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் சுமார் 110 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இம்மாகாணத்தில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பில் மத்திய அரசுடன் தாம் கலந்துரையாடி விரைவில் இதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இம்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசினால் வைத்தியர்களை நியமிக்கும்போது, எம்முடன் கலந்தாலோசிக்காது வைத்தியர்களை நியமிக்கின்றனர். அந்த வகையில், தற்போது எனது மாகாணத்துக்கு சுமார் 69 வைத்தியர்களை நியமித்துள்ளனர். இதில் அம்பாறைக்கு 47 வைத்தியர்களும் ஏனைய மூன்று பிராந்தியங்களுக்கு சுமார் 22 வைத்தியர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக நான் மத்திய அரசின் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். மீண்டும் சில திருத்தங்களைச் செய்து வைத்தியர்களை நியமிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X