2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளன மாதாந்தக் கூட்டம் நாளை

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இம்மாதத்துக்கான கூட்டம் கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா காரியாலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(17) மாலை 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில், எதிர்வரும் 24ஆம் திகதி கல்முனையில் நடைபெறவுள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தின நிகழ்வு, மட்டக்களப்பு ஊடக அமையம் அமைத்தல், எதிர்காலச் செயற்பாடுகள், ஊடகவியலாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதனால் அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X