2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

குழு நியமிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின்; அதிகமான பாலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை ஒளிரச் செய்வது தொடர்பில் விவரங்களை பெற்று அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

பொத்துவில், அறுகம்பை  பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன மின்விளக்குகள்  நீண்டகாலமாக ஒளிராமலுள்ளன. இதனால் உல்லாசப் பிரயாணிகளும் பொதுமக்களும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பொத்துவில், அறுகம்பை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை ஒளிர வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X