2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கைவிடப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உலுவில் பள்ளக்காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று புதன்கிழமை(23) மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரு தினங்களாக குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை அவதானித்த பிரதேசவாசி ஒருவர் வழங்கி தகவலுக்கமையவே பொலிஸ் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் அண்மையில் அரசாங்கத்தினால் மானி அடிப்படையில் வழங்கப்பட்ட பஜாஜ் டிஸ்கவரி, நுP டீடீஏ  1851 எனும் இலக்கத்தைக் கொண்டதெனவும் இதன் உரிமையாளர் காரைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த கே.சுதர்சன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X