2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

அம்பாறை, நாவிதன்வெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உண்டியலிலிருந்த பணம்; மற்றும் நேர்த்திக்கு கிடைத்த பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05 இரவு திருட்டுப் போனமை தொடர்பில் பொலிஸில் கோவில் நிர்;வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை கோவிலுக்கு வழிபடுவதற்குச் சென்றவர்கள், அக்கோவில்க் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் உண்டியல் வெளியில் கிடந்ததையும் அவதானித்து கோவில் நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்து பார்த்த கோவில் நிர்வாகத்தினர், உண்டியலிலிருந்த பணமும் நேர்த்திக்காக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் ஒலிபெருக்கி உபகரணமும் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X