2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றிய மூவர் கைது

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காடு களியோடை ஆற்றில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்று மணல் ஏற்றிய மூவரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து உழவு இயந்திரத்தில் ஆற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூவரை கைது செய்ததுடன் மண்ணுடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை,ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X