2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 24 மாடுகள் கைப்பற்றல்

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை மூடப்பட்ட லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 24மாடுகளை அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த லொறியை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டபோதே, மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட மாடுகளும் மாடுகளை ஏற்றி சென்ற லொறியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மாடுகளும் லொறியும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X