Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஜூன் 05 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜமால்டீன்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற நான்கு பேரை நேற்று சனிக்கிழமை (04) கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபை தலைமை காரியாலய புலனாய்வு பிரிவினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், மின்வாசிப்பு மானியில் குளறுபடி செய்து வீடுகளுக்கு மின்சாரத்தை பெற்றுள்ளனர் என்றும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .