2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணிக் கிராமத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரான ஒருவரை  ஞாயிற்றுக்கிழமை (01) மாலை பொலிஸார்  கைதுசெய்துள்ளதுடன், மதுபானத்தையும் கைப்பற்றியுள்ளனர்.  

இந்தச் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மேற்படி கிராமத்தில் திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தபோதே சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X