2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சந்தர்ப்பங்களையும் வளங்களையும் சரியாக பயன்படுத்த வேண்டும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

சுயதொழில் முயற்சியாளர்கள் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் வளங்களையும் சரியாக பயன்படுத்தி, நாட்டில் சிறந்த தொழில் முயற்சியாளர்களாக வளர வேண்டும். இதற்கான கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் வங்கி தயாராக உள்ளது என அம்பாறை உதவிப் பிராந்திய முகாமையார் கபில திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில் மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.ஜீ.நிஷாம் தலைமையில் வங்கி கிளையில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் வங்கி கிளைகளில் பணிபுரிவர்கள் எல்லோரும் வறுமை நிலைமைகளை நன்கு அறிந்தவர்களாகவே இருக்கின்றனர். காரணம் அவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களில் இருந்து தொழிலுக்காக வந்தவர்கள். இதனால், வறுமையின் கொடுமை  பற்றி நாம் நன்கு புரிந்து வைத்துள்ளோம்.

இந்த நாட்டில் வறிய மக்களும் வசதிப்படைத்தவர்களாக மாறவேண்டும். இதற்காகவே நாம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். நாம் வறியவர்கள் என ஒதுங்கி இருக்காது. சுயதொழில் கடன்களை பெற்று முயற்சியான்மையுடன் தொழிகளை சரியாக செய்து நீங்களும் முன்னேற்றி நாட்டின் பொருளாதாரத்தினையும் உயர்த்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X